ஜனவரி 22, 2016 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jan 22, 2016, 04:47 PM

Subscribe

இன்றைய (22-01-2016) பிபிசி தமிழோசையில்,

இலங்கை அரசுக்கான எதிர்க்கட்சியை தாம் ஏற்படுத்தப்போவதாக இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ச பிபிசியிடம் தெரிவித்துள்ளது குறித்த செய்திகள்;

விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் பிரிவினைவாத சிந்தனை இன்னமும் இலங்கையில் தோற்கடிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரட்ன, இரகசியமாக நாட்டை வெளியேறியிருந்தாலும் இதனால் ரக்னா லங்கா விசாரணைகள் பாதிக்கப்படாது என்று ஜனாதிபதி விசேட விசாரணைப் பிரிவின் செயலாளர் லெசில் த சில்வா பிபிசியிடம் தெரிவித்துள்ளது குறித்த செய்தி;

தமிழ்நாட்டின் முதல்வர் ஜெ ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு கர்நாடக அரசுக்கு அதிகாரமில்லை என்று அந்த வழக்கில் பிரதானமாக குற்றம் சாட்டப்பட்டவரான ஜெயலலிதா நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது குறித்த செய்தி;

சேலத்திற்கு அருகே முஸ்லிம் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது குறித்த செய்தி;

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் வேமுல ரோஹித் என்கிற தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்திய அளவில் உயர்கல்வி நிலையங்களில் தலித் மாணவர்கள் சந்திக்கும் சாதி ரீதியிலான ஒடுக்குமுறைகள் ஒதுக்கல்கள் குறித்த விவாதத்தை தோற்றுவித்துள்ள பின்னணியில் சென்னை கல்லூரிகளில் படிக்கும் தலித் மாணவர்கள் சிலரை சந்தித்த சென்னை செய்தியாளர் முரளிதரன் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து தெரிவித்திருக்கும் கருத்துக்கள்;

புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது ஜெர்மனியின் கொலோன் மற்றும் வேறு சில நகரங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல்களுக்கு பெரும்பங்கு பொறுப்பு குடியேறி இளைஞர்கள் என்று பழிசுமத்தப்படும் நிலையில், ஜெர்மனிய மக்கள் புது வித தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது குறித்த செய்தி ஆகியவற்றைக் கேட்கலாம்.