தெற்காசியாவின் வேகமான மனிதர்,மங்கை இலங்கையில்

Feb 12, 2016, 05:42 PM

Subscribe

இந்தியாவில் நடைபெறும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் 100மீ ஓட்டத்தில் இலங்கை வீரர்கள் தங்கம் வென்றுள்ளனர்.

இதன் மூலம் தெற்காசியாவில் மிகவும் வேகமான மனிதர் மற்றும் மங்கை எனும் பெருமையை இலங்கையின் ஹிமாஷா இஷான் மற்றும் ருமேஷிகா ரத்நாயக்க ஆகியோர் பெற்றுள்ளனர்.

அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி மற்றும் மேகாலயா மாநிலத் தலைநகர்களின் 12ஆவது தெற்காசியப் போட்டிகள் இடம்பெறுகின்றன.

இதில் தடகளப் போட்டிகளில் இந்தியா கூடுதலான தங்கப் பதக்கங்களை பெற்றிருந்தாலும், குறுந்தூர ஓட்டத்தில் இலங்கை வீரர்கள் குறிப்பிடத்தக்க ஆளுமையை பதித்துள்ளனர்.

அவர்களின் இந்தச் சாதனை குறித்து, முன்னர் தெற்காசியாவின் மிகவும் வேகமான மனிதர் என்று அறியப்பட்ட டாக்டர் ஆர்.நடராஜன் பிபிசி தமிழோசையிடம் பகிர்ந்துகொண்டக் கருத்துக்களை இங்கே கேட்கலாம்.