பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- பிப்ரவரி 28
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்...
இலங்கையில் தமிழர்களுக்கு தீர்வாக சமஷ்டி முறை அதிகார பரவலாக்கல் கிடைப்பதற்கு இந்தியா துணை நிற்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் கோரியிருப்பது குறித்த செய்தி
இலங்கை காவல்துறையால் தானும் கைதுசெய்யப்படலாம் என்று முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியிருப்பது பற்றிய செய்தி
தமிழகத்தில் நடந்துவரும் தேர்தல் கூட்டணி பேச்சுக்களின் பின்னணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை மத்தியில் ஆளும் பாஜக பிரதிநிதி சந்தித்திருப்பது குறித்த தகவல்
லண்டனில் இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மாணவி ஒருவருக்கு, குருத்தணு தானம் செய்யக்கூடிய ஒருவரைத் தேடி, உலக அளவில் முன்வைக்கப்படும் கோரிக்கை பற்றிய செய்தி
ஈழத்துப் பாடல்கள் சிறப்புத் தொடரின் ஆறாம் பாகம்
