கைதிகள் விவகாரம்: தாமதத்துக்கு 'வேறு தலையீடுகள்' காரணம்- சம்பந்தன்
Share
Subscribe
கைதிகள் விவகாரத்தில் வரும் 8-ம் திகதி, செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதம் நடக்கவுள்ளதாகவும் அதன் மூலம் கைதிகளின் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தமிழோசையிடம் கூறினார்.
இந்தக் கைதிகள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்காக பிரதமர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சட்டமா அதிபர் அலுவலகத்தினர் உள்ளிட்ட தரப்பினர் அடங்கலாக அரசியல் குழு ஒன்றை நியமிப்பதற்கு ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் 'வேறு தலையீடுகள் காரணமாக' அந்த முடிவு நிறைவேற்றப்படவில்லை என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
'அந்த முடிவு நிறைவேற்றப்பட்டிருந்தால், (கைதிகள் பிரச்சனை) எப்போதோ முடிந்திருக்க வேண்டும்' என்றார் சம்பந்தன்.
எதிர்வரும் 8-ம் திகதி நாடாளுமன்ற விவாதத்தின்போது, காணாமல்போனோர் விவகாரம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
