தமிழகத்தில் பிறந்த 'இலங்கை அகதிகளின்' எதிர்காலம் என்ன?
Share
Subscribe
தமிழகத்தில் திருமங்கலம் அருகே, அகதிகள் முகாம் ஒன்றில் அதிகாரி ஒருவரின் நடவடிக்கையால் மனமுடைந்த இலங்கை அகதி ஒருவர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழகத்தில் இலங்கை அகதிகளின் அவல நிலை குறித்த கவலைகளை அதிகரித்துள்ளதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இந்த முகாமுக்கு சென்றிருந்த உண்மை கண்டறியும் குழுவொன்று, இந்திய அரசுக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.
தமிழகத்தில் வாழ்ந்துவரும் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகளுக்கும், அவர்கள் விரும்பும் பட்சத்தில் இந்திய குடியுரிமையை வழங்கவேண்டும், குறிப்பாக தமிழகத்தில் பிறந்த இலங்கை அகதிகளின் இளைய தலைமுறையினருக்கு இந்தக் குடியுரிமையை வழங்குவது அவசியம் என்பது அந்த பரிந்துரைகளில் ஒன்று.
தமிழகத்தில் 1990களில் தஞ்சம்புகுந்த இலங்கை அகதிகளின் பிள்ளைகள், இந்தியக் குடியுரிமை இல்லாமல் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக அந்தக் குழுவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த ஆர். முரளி, பிபிசி தமிழோசையின் ஜெயப்பிரகாஷ் நல்லுசாமிக்கு அளித்த பேட்டியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
