புலிகளின் எண்ணிக்கை உயர்ந்தது எப்படி?
Share
Subscribe
உலகளவில் காடுகளில் வாழ்ந்துவரும் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது உலகளவில் 3900 புலிகள் வாழ்ந்துவருவதாக கணக்கிடப்பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் இருந்த அளவைவிட இப்போது காடுகளில் வாழும் புலிகளின் எண்ணிக்கை 700 உயர்ந்துள்ளன். இந்தியா, ரஷ்யா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன. புலிகளின் எண்ணிக்கை உலகளவில் உயர்ந்துள்ளது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், கௌரவ வனவிலங்கு பாதுகாவலராகவும் இருந்த தியோடர் பாஸ்கரன் பிபிசி தமிழோசையிடம் பகிர்ந்துகொண்ட கருத்துக்களை இங்கே கேட்கலாம்.
