காலை கொஞ்சும் நேரம்

May 28, 2016, 06:22 PM

காலை கொஞ்சும் நேரம் கடற் கரையின் ஓரம் கன்னியின் இதழின் ஈரம் கன்னங்கள் பெற்ற வரம்

அலை வந்து தொடும் அரை வெட்கம் விடும் உன் மேனி படும் ஊன் உறக்கம் கெடும்

நீ எனக்கு வள்ளி தீயை மூட்டும் கொள்ளி நினைவு உறங்கும் பள்ளி நெஞ்சில் மணக்கும் மல்லி

குடும்பத்தில் இருக்குது மோதல் குமரிக்குள் இருக்குது காதல் விடும்பகை எண்ணியே சாதல் வேதமாய் உன்பெயர் ஓதல்!