மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

Jun 22, 2016, 05:23 PM

Subscribe

இந்த ஆண்டு இறுதிக்குள், ரஷ்யாவைப் போல அதிகபட்ச செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் ஏவும் சாதனையை எட்ட முடியும் என்று மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். அதிக எடை கொண்ட தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களை இரண்டு ஆண்டுகளிலும், 70 செயற்கைக் கோள்களை நான்கைந்து ஆண்டுகளிலும் ஏவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். செமி கிரையோ என்று அழைக்கப்படும், 10 டன் வரை எடை கொண்ட செயற்கைக் கோள்களை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப, ஒருமித்த கருத்துடைய நாடுகளுக்கிடையே ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.