இலங்கை: 3-ஆம் பாலினத்தவர் எதிர் கொள்ளும் மனித உரிமை மீறல்

Aug 16, 2016, 04:35 PM

Subscribe

பாலினம் பற்றிய சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படாத மூன்றாம் பாலினத்தவரும், மற்றவரும் இலங்கையில் பாரபட்சங்களை எதிர்கொள்வதாக ஹூமன் ரைட்ஸ் வாச் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“ஐந்து விரல்களும் ஒரே மாதிரியாக இல்லை: பாலினம் இனம் காணுதல் மற்றும் பாலின நெறியாக்கம் அடிப்படையில் பாரபட்சம்” என்ற தலைப்பில் 63 பக்க அறிக்கை நேற்று வெளியானது.

பாலின விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படாதவர்கள், காரணமின்றி தடுத்து வைப்பது, தொல்லைகள் தருவது, வேலைவாய்ப்பு, குடியிருப்பு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகிய அனைத்திலும் இலங்கையில் மூன்றாம் பாலினத்தவருக்கு பாரபட்சங்கள் காட்டப்படுவதை இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது,