இத்தாலியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து அங்குள்ள தமிழரின் பேட்டி
Share
Subscribe
புதன்கிழமை இரவு இத்தாலியின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 260 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தப் பகுதியில் மிகவும் பலமான நில அதிர்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இத்தாலியப் பிரதமர் மட்டையோ ரென்ஸி அவசர நிலையை பிரகடனம் செய்திருக்கிறார். அந்தப் பகுதியில் மிகவும் பலமான நில அதிர்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள அவரச நிலை குறித்தும், தமிழர் வாழும் பகுதிகள் குறித்தும் நில நடுக்கம் ஏற்ப்பட்டுள்ள பகுதியில் இருந்து சுமார் 300கி.மீ தூரத்தில் உள்ள ரெஜியோ எமிலியா என்ற இடத்தில் வசிக்கும் ஜோசப் என்ற தமிழரின் பேட்டி.
