சௌதியில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்கள் குறித்த பேட்டி

Aug 26, 2016, 05:26 PM

Subscribe

சௌதி அரேபியாவில் வேலையிழந்து, வறுமையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டுமென்று இந்திய வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். தனது ட்விட்டர் வலைத்தளத்தில், சௌதி அரேபியாவில் வாடும் இந்தியர்கள் குறித்து சுஷ்மா சுவராஜ் செய்தி வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 25ம் தேதிக்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்தால், அவர்களை நாட்டுக்கு அழைத்து வர அரசு உதவும் என்று காலக்கெடுவை இந்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து சௌதி அரேபியாவில் ரியாத் என்ற பகுதியில் வசிக்கும் முஹமத் யூசுப் என்ற நபர் பி பி சிக்கு அளித்துள்ள பேட்டியில், சம்பள பாக்கியை திரும்ப பெறாமல் தொழிலாளர்கள் உடனடியாக வர இயலாது என்றும் இந்திய அரசு காலக் கெடுவை நீடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.