மவுலிவாக்கம் கட்டிடத்தில் வீடு வாங்கியதால் பாதிக்கப்பட்ட நபரின் பேட்டி
Share
Subscribe
சென்னையில், அபாயகரமான நிலையில் இருந்த, 61 பேரை பலிவாங்கிய, 11 மாடி மவுலிவாக்கம் கட்டிடம் இன்று இடிக்கப்பட்டது. மவுலிவாக்கம் கட்டிடத்தில் வீடு வாங்குவதற்காக பலர் தங்களது சேமிப்பு முழுவதையும் முதலீடு செய்தனர். மற்றும் பலர் வங்கிகளில் கடன் பெற்றனர்.
தற்போது இந்த கட்டிட்டம் நீதிமன்ற உத்தரவு படி இடிக்கப்படும் வேளையில், இந்த கட்டிடத்தில் வீடு வாங்கியதால் பாதிக்கப்பட்ட பலர் நீதி வேண்டும் என கோரியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து ஒரு சங்கம் அமைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் சங்கத்தில் ஒருவரான கண்ணன் தனது நிலையை பிபிசி தமிழோசையிடம் பகிர்ந்துகொண்டார். ''வெளிநாட்டில் வேலை செய்து சேர்த்த மொத்த பணமான 37 லட்சத்தையும் வீடு வாங்க முதலீடு செய்தேன். தற்போது வீடும் எனக்கு கிடைக்கபோவதில்லை. இந்த முதலீடும் வீணாக போய்விட்டது. எனது மகனின் எதிர்காலத்திற்கு தேவைப்படும் என்று எண்ணி தான் வீடு வாங்க முதலீடு செய்தேன்,'' என்றார்.
அவர் மேலும், முதல்வர் தனி பிரிவிற்கும் மற்றும் பல அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தாகவும், இன்று வரை எந்த பதிலும் கிடைவில்லை என்றார். வங்கி கடன் பெற்ற பலர் தற்போதும் வட்டி செலுத்தி வருகின்றனர் என்றார் அவர்.
