ஜல்லிக்கட்டு விவகாரம்: பி ஜே பி இளைஞர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு
Share
Subscribe
ஜல்லிக்கட்டு நடத்த கோரி மதுரையில் மாணவர்கள், திரைதுறையினர், மதுரை மற்றும் சுற்றுவட்ட மாவட்டத்தில் இருந்து வந்த பலரும் சனிக் கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடக்கும் இடமான அவனியாபுரத்தில் இளைஞர்கள் பலர் ஊர்வலகமாக சென்றனர். போராட்டத்தை நிறுத்துமாறு காவல் துறையினர் வலியுறுத்தினார் என்றும் தடியடி நடத்தினர் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையைச் சேர்ந்த ஜெயகார்த்தி ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பி ஜே பி இளைஞர்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.