``ஜல்லிக்கட்டு போராட்டத்தை தள்ளிவைக்கவேண்டும்``
Share
Subscribe
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தை போராட்டக்காரர்கள் தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் கார்த்திகேய சேனாபதி கூறியிருக்கிறார். பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்த சேனாபதி, இந்த அவசர சட்டம் தலைவலிக்கு தற்காலிக நிவாரணி தருவது போன்ற ஒரு தீர்வுதான், அதை சட்டமன்றம் சட்டமாக்குவதுதான் நிரந்தர தீர்வு . ஆனால் அதற்கு காலமெடுக்கும் என்ற நிலையில், ஓரளவு கால அவகாசம் தந்து, உதாரணத்துக்கு மார்ச் 31 வரை தந்து, பின்னர் தேவைப்பட்டால் இதை மீண்டும் தொடங்கலாம் என்றார் .