நம்புங்கள் முருகன் நல்லவன்

Jun 16, 2017, 04:46 AM

நான் சிறு வயதில் மாரிப்போக வேளாண்மை செய்வதற்கு இரண்டு வெள்ளை மாடுகளை விரட்டிக்கொண்டு கலப்பையை கொழுவி அப்பாவுடன் மதிரங்கேட்டியை மரத்தில் வெட்இக்கொண்டு, காலைவேளையில் கட்டோரமாக வில்லுக்குளம் நோக்கி நடந்த நாட்கள் ஞாபகம் வருது. வெறும் குடத்தை சுமந்து கொண்டு முருகன் ஆலயத்தில் தண்ணீா் எடுத்து வயலுக்குள் செல்வதுதான் வளமை. அப்போது பாலமுருகன் ஆலயத்தில் வெள்ளிக்கிளமைகளில் சிலர் பொங்கல் வைப்பதுண்டு. அதிலும் சிலர் ஒலிபெருக்கி எடுத்து விஸேடமாக பூசை செய்வர். அந்த நாட்களில் காற்றின் திசைக்கேற்ப்ப சில்லூறுகளின் சப்தங்களுக்கு நடுவே ஒலிபெருக்கியில் வரும் பாடல்கள் பாதி கேட்காமலும் பாதி கேட்டும் தூரத்தில் இருந்து நெருங்க நெருங்க ஆசையோடு கேட்ட பாடல் ஒன்று இன்றும் பசுமரத்தாணி போல் பதிந்து கிடக்கிறது. அருமையான பாடல். அதில் வரும் இன்ரலூட் இசையும் அதன் ஆழ்ந்த பொருளும் அழகான குரலும் என்னை ஒரு தடவை முருகனிடமே கூட்டிப்போய்விட்டது. "அழுபவர் கண்ணீரை முருகன் அன்பால் துடைக்கின்றான்- தன்னை தொழுபவர் வாழ்வினிலே பிறவித் துயரைத் தடுக்கின்றான் இரவும் பகலுமில்லை முதுமை இளமை பேதமில்லை-அன்பு உறவுகொண்டவர்க்கு முருகன் உதவ மறுத்ததில்லை"