வேரையறுத்தல்லோ காடை அழித்தோம்

Aug 06, 2017, 09:20 AM

வேரையறுத்தல்லோ காடை அழித்தோம் காடையழித்தல்லோ வீடை அமைத்தோம் வீடையமைத்தல்லோ பீடை வளர்த்தோம் பீடைவளர்த்தல்லோ கோடை ஆக்கினோம் கோடைவந்தல்லோ மழையை இழந்தோம் மழையை இழந்தல்லோ குழைகள் தொலைத்தோம் குழைகள்வரண்டல்லோ உணவை இழந்தோம் உணவை இழந்தல்லோ உண்டி வரண்டோம் உண்டிவரண்டும் உருவாக்கினானா காட்டை இல்லை