அஞ்ஞானம் மறைந்து மெஞ்ஞானம் உருவான நாள்!

Oct 17, 2017, 06:35 PM

அஞ்ஞானம் மறைந்து மெஞ்ஞானம் உருவான இந்நாளை அர்த்தமுள்ள களியாட்டங்களுடன் கொண்டாடி மகிழ்வதை விடுத்து இன்று அர்த்தமற்ற களியாட்டங்களால் பிற சமயத்தவரின் கேளிக்கைகளுக்கு உள்ளாக்குவது தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாக காணப்படுகின்றது. இந்து மக்கள் தமக்கென ஒரு வீடு இல்லாத போதும் கடவுளுக்கு கோயில்களைக் கட்டி சமயத்தினை வளர்த்தனர். ஒரு இனத்தின் வரலாற்றயும், இருப்பினையும் நீண்ட ஆயுளினையும் மீட்டிப்பார்ப்பதற்கு சமயங்கள் அதன் வழிபாடுகள் மற்றும் பண்டிகைகள் ஆகியன முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன.