ஊழலில்லாத அரசியலா

Oct 21, 2017, 06:03 AM

ஊழலில்லாத அரசியலா உணர்வில்லாத உறவுகளா ஆசையில்லாத தலைவர்களா வேஷமில்லாத மேடைகளா

உரிமையில்லாமல் வாழிடமா ஊக்கமில்லாமல் சுதந்திரமா பெருமையில்லாமல் பிறப்பதுண்டா பேரில்லாமல் இறப்பதுண்டா

நீரில்லாமல் ஓடங்களா நிலமில்லாமல் ஒற்றுமையா வேரில்லாமல் விருட்சங்களா வேதனையில்லாமல் விடிவுகளா