ஆறுமுகம் ஐயாவின் திருப்புகழ்

Apr 18, 2017, 01:49 PM

திருப்புகழ் அருணகிரியார் பாடினார் என்பதனை விட ஆறுமுகம் பாடினார் என்பதுதான் எமக்கெல்லாம் தெரியும். இராஜ ராஜ சோழன் பழய தேவாரப்பதிகங்களையெல்லாம் தொகுத்து இந்த உலகிற்கு அளித்ததுபோல் புழுதிமண்டிக்கிடந்த பல பாடப்படாத அற்புதமான திருப்புகழ்களையெல்லாம் மிகவும் அற்புதமாக பண்ணோடு பாடி இறைவனையும் அடியார்களையும் மகிழ்வித்து அதன் புகழ் பரப்பிய "ஆறுமுகச் சோழன்" இவர் என்றால் அது மிகையில்லை.